9.1 C
Cañada
March 31, 2025
தொழில்நுட்பம்

400 ஹாலிவுட் பிரபலங்கள் அமெரிக்க அரசுக்கு கடிதம் எழுதி, AI பதிப்புரிமை பரிந்துரைக்கு எதிர்ப்பு

Google மற்றும் Open AI நிறுவனங்கள், தங்களது AI மாடல்களுக்கு பயிற்சியளிக்க, பதிப்புரிமை பெற்ற படைப்புகளை அதன் உரிமையாளர்களின் அனுமதி இல்லாமல் மற்றும் இழப்பீடு வழங்காமல் பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை அமெரிக்க அரசுக்கு வழங்கியுள்ளன. இந்த பரிந்துரைக்கு எதிராக, 400 ஹாலிவுட் பிரபலங்கள், வெள்ளை மாளிகையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை அலுவலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்த கடிதத்தில், ஹாலிவுட் பிரபலங்கள் கூறியுள்ளதாவது, “இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் வழங்கிய பரிந்துரை, பதிப்புரிமை பாதுகாப்புகளை பலவீனப்படுத்த முயற்சிக்கிறது. கூகிள் மற்றும் ஓபன் ஏஐ போன்ற நிறுவனங்கள், அமெரிக்காவின் படைப்பு மற்றும் அறிவுத் தொழில்களை சுரண்டுவதற்காக, சிறப்பு அரசாங்க விலக்குகளை கோருகின்றன. இவர்கள் கணிசமான நிதியுடன் இருந்தும், பதிப்புரிமை பாதுகாப்புகளை பலவீனப்படுத்த எந்த காரணமும் இல்லை.” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், AI நிறுவனங்கள் தரவுகளுக்கு தடையின்றி அணுகலைக் கோரும்போது, அது திரைப்படங்கள், புத்தகங்கள் மற்றும் இசை துறையை மட்டுமல்லாமல், அனைத்து விதமான அறிவுசார் சொத்துக்களை உருவாக்கும் தொழில்நுட்ப நிபுணர்களின் பணியையும் அச்சுறுத்துவதாக ஹாலிவுட் பிரபலங்கள் குறிப்பிட்டுள்ளனர். AI நிறுவனங்களும் பதிப்புரிமை பெற்ற படைப்புகளை பயன்படுத்த, முறையான உரிமத்தை பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த கடிதத்தில், பிரபல நடிகர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இசையமைப்பாளர்களான Ben Stiller, Ron Howard, Cate Blanchett, Cynthia Erivo, Paul McCartney உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட ஹாலிவுட் பிரபலங்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

Related posts

முதல்முறையாக அணுசக்தி கப்பலை வெளிக்காட்டிய வடகொரியா

admin

2025 BMW C 400 GT பிரீமியம் மேக்ஸி-ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்

admin

9 மாதங்களுக்கு பிறகு பூமி திரும்பவுள்ள சுனிதா வில்லியம்ஸ்

admin

Leave a Comment