டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கா நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றபோது, அவருடைய நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அவற்றில் ஒன்று, அரசாங்கத்தின் செலவுகளை குறைப்பது என்பதாகும். இதன் ஒரு பகுதியாக, அரசுத்துறைகளில் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், தேவையற்ற பணியாளர்களை நீக்கவும் பரிந்துரைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அமெரிக்காவின் முக்கிய ராணுவ தலைமையிடம் பென்டகன் ஆகும், இதன் கீழ் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பணிபுரிகின்றனர். தற்பொழுது, பென்டகனில் பணிபுரியும் 60 ஆயிரம் ராணுவ ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தப் பணிநீக்க நடவடிக்கையின் கீழ், தாமாகவே தங்களுடைய பணியிலிருந்து விலக விரும்புவோர் பல்வேறு சலுகைகள் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, 20 ஆயிரம் பேர் தங்களுடைய ராஜினாமா கடிதங்களை தாக்கல் செய்துள்ளனர்.