9.1 C
Cañada
March 31, 2025
இந்தியா

Wolf Dog வகையைச் சேர்ந்த நாயை ரூ.50 கோடிக்கு வாங்கிய நபர்

உலகின் மிக விலையுயர்ந்த நாய் எனக் கூறப்படும் Wolf Dog-யை பெங்களூருவைச் சேர்ந்த நாய் வளர்ப்பாளர் ஒருவர் ரூ.50 கோடிக்கு வாங்கியுள்ளார். இதன் மூலம் இது உலகின் மிக உயர்ந்த நாய் இனமாக மாறியுள்ளது.

இது ஓநாய் மற்றும் காகசியன் ஷெப்பர்ட் இனத்திற்கு இடையிலான கலப்பினமாகும். இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவரான சதீஷ் 150-க்கும் மேற்பட்ட வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த நாய்களை வளர்த்து வருவதுடன், இதனை பராமரிப்பதற்கு 7 ஏக்கர் பண்ணையையும் வைத்துள்ளார். 6 பணியாளர்கள் வைத்து நாய்களை பராமரிப்பதுடன், நாய்களை பார்க்க வருபவர்களிடம் இருந்து கட்டணம் வசூலித்து வருகிறார்.

அத்தோடு இந்த அசாதாரண இனத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவதை தனது குறிக்கோளாகவும் கொண்டுள்ளார். இந்த நிலையில் தான் உலகின் விலையுயர்ந்த நாயான Wolf Dog விற்பனைக்கு வந்தது. இதனை இவர் ரூ.50 கோடிக்கும் மேல் பணம் கொடுத்து வாங்கியுள்ளார்.

எட்டு மாத வயதுடைய கலப்பின இவ் அரிய வகை நாய் இனத்தை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் 5 கிலோ எடை கொண்ட இந்த நாய், ஒவ்வொரு நாளும் 3 கிலோ பச்சை இறைச்சியை சாப்பிடுகிறது.

நாய்கள் மீதுள்ள பிரியம் காரணமாக இந்த நாயை 50 மில்லியன் டொலர் கொடுத்து வாங்கியதாகவும், இந்த நாய் அரிதானது என்பதால் மக்களும் இதனை ஆர்வமாக பார்க்க வருகின்றனர் எனவும் சதீஷ் தெரிவித்துள்ளார்.

Related posts

மும்பை தாக்குதல்: தஹவூர் ராணாவின் மனு நிராகரிப்பு

admin

எட்டு வயது மகளுடன் 23ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய்

admin

கேரளாவில் இளம் உளவுத்துறை பெண் அதிகாரி மரணம்

admin

Leave a Comment