6.6 C
Cañada
March 22, 2025
இலங்கை

சீன சொக்லேட்டினை விற்பனைக்கு வைத்த யாழ் கடை உரிமையாளருக்கு 64 ஆயிரம் ரூபாய் தண்டம்

யாழ்ப்பாணத்தில் சீன சொக்லேட் வகைகளை சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளருக்கு 64 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சொக்லேட் வகைகள் இலங்கைக்குள் அனுமதியின்றி கொண்டு வரப்பட்டு, சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட மானிப்பாய் பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினரால் சோதனை செய்யப்பட்டது.

சோதனை மூலம், உரிய சுட்டு துண்டுகள் இல்லாமல் சீன சொக்லேட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. இவை ஊசி, ஊசி மருந்து மற்றும் சைனேட் குப்பி வடிவங்களில் இருந்தன. இவை சான்று பொருட்களாக கைப்பற்றப்பட்டு, கடை உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

நேற்று (20) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கில் கடை உரிமையாளர் குற்றத்தை ஏற்றுக்கொண்டார், அதன்போது அவருக்கு 64 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

Related posts

இஷாரா செவ்வந்தி மாலைத்தீவிற்கு தப்பியிருக்க கூடும் என பொலிசார் சந்தேகம்

admin

மட்டக்களப்பு காட்டுப்பகுதியில் பிறந்த குழந்தையை வீசி எறிந்த பெண் – சடலமாக மீட்கப்பட்ட சிசு

admin

மிகப்பெரிய மீன்பிடிக் கப்பலைத் தயாரித்த இலங்கை

admin

Leave a Comment