13.1 C
Cañada
March 22, 2025
இலங்கை

குருநாகல் பகுதியில் விபத்துக்குள்ளான பயிற்சி ஜெட் விமானம்

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி ஜெட் விமானம் இன்று (21) குருநாகல் பகுதியில் விபத்துக்குள்ளான நிலையில், அதனைப் பற்றி விசேட விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் பந்து எதிரிசிங்கவால் 7 பேர் கொண்ட இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

இன்றைய விபத்து, ஶ்ரீலங்கா விமானப்படையின் கட்டுநாயக்க முதன்மை முகாமில் உள்ள K-8 வகை விமானத்தின் பயிற்சியின் போது நிகழ்ந்தது. இந்த விமானம், வாரியபொல மற்றும் பாதெனிய பகுதியில் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள் பாதுகாப்பாக வெளியேறி, குருநாகல் பாதெனிய மினுவன்கெடே கல்லூரி வளாகத்தில் பாராசூட் மூலம் தரையிறங்கினர்.

விமானத்தில் பிரதான பயிற்சி ஆலோசக விமானி மற்றும் பயிற்சி விமானி பயணித்தனர், அவர்கள் தற்போது குருநாகல் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விமானம் கட்டுநாயக்க முகாமிலிருந்து காலை 7:27 மணிக்கு புறப்பட்டு, 7:55 மணிக்கு விபத்துக்குள்ளானது என விமானப்படை தெரிவித்துள்ளது.

Related posts

பதவியில் இருந்து விலகப் போவதாக சபையில் அறிவித்த அர்ச்சுனா எம்.பி

admin

நாவுல பகுதியில் நடைபெற்ற விபத்தில் இருவர் பலி

admin

பெண் மருத்துவரை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய சந்தேகநபர் வாக்குமூலம்

admin

Leave a Comment