கூகுள் நிறுவனம் கிளவுட் செக்யூரிட்டி பிரிவில் தனது பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், Wiz (விஸ்) என்ற நிறுவனத்தை 32 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கையகப்படுத்தியுள்ளது.
இந்தச் செயல்பாடு கூகுளின் வரலாற்றில் மிகப்பெரிய ரொக்கச் செலவாகும். இஸ்ரேலில் தலைமையிடமாக 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விஸ் என்பது கிளவுட் செக்யூரிட்டி சாப்ட்வேர் நிறுவனம் ஆகும். இதில் 1700 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கையகப்படுத்தலுக்குப் பிறகு, விஸ் நிறுவன ஊழியர்கள் தொடர்ந்தும் அதே நிறுவனத்தில் பணியாற்றும் வகையில் ஒவ்வொருவருக்கும் 2.8 மில்லியன் டொலர்கள் வழங்கப்படும்.
இந்த மிகப்பெரிய ஒப்பந்தத்தின் மூலம், 1700 புதிய பணக்காரர்கள் ஒரே நாளில் உருவாகி இருப்பதாக அமெரிக்காவின் தொழில்நுட்ப உலகம் கருதுகிறது.