13.1 C
Cañada
March 22, 2025
சினிமா

நடிகர் வடிவேலுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா..!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை சிம்மாசனத்தில் பலரும் அமர்ந்திருப்பார்கள், அதில் 90களில் வைகை புயல் வடிவேலு முக்கிய இடம் பெற்றவர். உடல்மொழி நகைச்சுவையுடன் பாமர மக்களின் மனதில் இடம்பிடித்த அவர், வெள்ளித்திரையில் துவங்கி மீம்ஸ்களிலும் பிரபலமாகி இருக்கிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக மாமன்னன் வெளிவந்தது. இப்படத்தில் நகைச்சுவையை முழுமையாக தவிர்த்து சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக முழுக்க முழுக்க காமெடி கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருக்கும் கேங்கர்ஸ் திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், வடிவேலுவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 100 கோடி முதல் 150 கோடி வரை இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை.

மேலும், வடிவேலு ஒரு படத்தில் நடிக்க ரூ. 4 கோடி வரை சம்பளம் பெறுவதாகவும் தகவல்கள் உள்ளன. அவரிடம் இரண்டு Audi கார்கள், BMW, Toyota என நான்கு சொகுசு கார்கள் உள்ளன, இதன் மதிப்பு ரூ. 2 கோடி எனக் கூறப்படுகிறது.

Related posts

பெருசு படத்தின் டிரெய்லர் இன்று வெளியீடு

admin

பாடகி ஷ்ரேயா கோஷலின் சொத்து மதிப்பு பற்றிய விபரம்

admin

பெருசு மற்றும் ஸ்வீட்ஹார்ட் படங்களின் வசூல் பற்றிய விபரம்

admin

Leave a Comment