வடகொரியா மீண்டும் அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகின்றது. எதிரி நாட்டு போர் விமானங்களை தாக்கி அழிக்கும் புதிய ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வருமாயின் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது.
அமெரிக்கா, தென்கொரியா இணைந்து ராணுவப் போர் பயிற்சியில் ஈடுபட்ட நிலையில் அதற்கு பதிலடியாக கொடுக்கும் வகையில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.