13.1 C
Cañada
March 22, 2025
உலகம்

ரத்துச்செய்யப்பட்ட லண்டனுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள்

இன்று (21) இரவு 20:40 மணிக்கு இலங்கையிலிருந்து லண்டன் நோக்கிப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL 503 (கொழும்பு முதல் லண்டன்) மற்றும் UL 504 (லண்டன் முதல் கொழும்பு) ஆகிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

இந்த முடிவை எடுக்க காரணமாக, லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் மின்சாரத் தடை மற்றும் தீ விபத்தால் முழுவதுமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது. பயணிகளுக்கான மாற்று ஏற்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும், ஹீத்ரோ விமான நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் ஹெய்ஸ் பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் விமான நிலையம் செயலிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஹீத்ரோ விமான நிலையம் மீண்டும் இயங்கும் வரை பயணிகளை அங்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை, மேற்கு லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இன்று மட்டும் 1351 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீ விபத்தால் 16,300 வீடுகளுக்கு மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த சில நாட்களில் விமான போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் ISIS தலைவர் அபு கதீஜா பலி

admin

சோவியத் கால எண்ணெய் குழாயை மீண்டும் பயன்படுத்த திட்டம்

admin

விண்வெளியில் ஏற்ப்பட்ட ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் விண்கல வெடிப்பு

admin

Leave a Comment