10 C
Cañada
March 22, 2025
இலங்கை

காணி விவகாரம் குறித்து மஹிந்தவின் மனைவி ஷிரந்தியிடம் விசாரணை 

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் (C.I.D) கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஷிரந்தி ராஜபக்ஷ தொடர்பான விசாரணை இரண்டு காணிகளின் உறுதி தொடர்பாக மேற்கொள்ளப்படுவதாகவும், இதில் ஒன்று இம்புல்கொடை மற்றும் மற்றொன்று களனியில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். களனியில் உள்ள ஒரு கோவிலுக்குள் அவர் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் காணி, கோவிலுக்குச் சொந்தமானது அல்ல. அது மஹிந்த ராஜபக்ஷ ஆன்மீக அறக்கட்டளையின் உடைமை எனவும் பிரதி அமைச்சர் கூறினார்.

இந்த காணி முதலில் 500,000 ரூபாவுக்கு வாங்கப்பட்டு, பின்னர் 10 மில்லியன் ரூபாவுக்கு விற்கப்பட்டதாகவும், அதன் உரிமையாளர் தங்காலை கார்ல்டன் ஹவுஸைச் சேர்ந்த ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இஹல இம்புல்கோடவில் உள்ள மற்றொரு காணி 1 மில்லியன் ரூபாவுக்கு வாங்கப்பட்டு, 12 மில்லியன் ரூபாவுக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பந்தமான காணி ஒப்பந்தங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சிஐடியிடம் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், ஊடகங்களில் இந்த விவகாரத்தைப் பற்றிய சில தகவல்கள் தவறாக வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை வழங்க பொதுமக்களுக்குத் துரித தொலைபேசி இலக்கம்

admin

அனுராதபுர சம்பவத்தினை முன்னிட்டு மருத்துவர்கள் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு

admin

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பணமோசடி செய்த பெண்

admin

Leave a Comment