6.7 C
Cañada
March 26, 2025
உலகம்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – விமான சேவைகள் பாதிப்பு

இந்தோனேசியாவின் கிழக்கு நுஸா தெங்காரா மாகாணத்தில் உள்ள ஃப்ளோரஸ் தீவில், லெவோடோபி லகி லகி எரிமலை வெடித்துள்ளது. இதன் காரணமாக, அந்த பகுதியின் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த எரிமலை மூன்று முறை வெடித்ததாகவும், சுமார் 26 ஆயிரம் அடி உயரத்திற்கு தீக்குழம்புகள் எழும்பி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலால், அவுஸ்திரேலியா-இந்தோனேசியா இடையிலான பல விமானங்கள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டன.

மேலும், அந்த பகுதியிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக செல்லும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். எரிமலை வெடிப்பினால் முழு பகுதியும் கரும்புகையால் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

டெஸ்லா வாகனம் மீது சுவஸ்திகா முத்திரை வரைந்த நபர்; கண்டனம் தெரிவித்த மஸ்க்

admin

ரஷ்யாவில் கர்ப்பமுறும் இளம் பெண்களிற்கு 1,000 பவுண்டுகள் வழங்கவுள்ள புடினின் திட்டம்

admin

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் சொத்துக்கள் முடக்கம்

admin

Leave a Comment