13.5 C
Cañada
March 29, 2025
உலகம்

எலான் மஸ்க்கிற்கு எதிரான தாக்குதல்கள்: 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறும் வகையில் கடந்த ஆண்டு எலான் மஸ்க் அவருக்கு ஆதரவளித்ததால், இருவருக்கும் இடையே நல்ல உறவு உருவானது. இதன் காரணமாக டிரம்ப் தனது நிர்வாகத்திலும் எலான் மஸ்க்கிற்கு முக்கிய இடம் வழங்கியுள்ளார்.

அமெரிக்க அரசின் செலவுகளை குறைக்கும் முயற்சிகளில் எலான் மஸ்க் நடவடிக்கை எடுத்ததனால், பொதுமக்கள் டெஸ்லா நிறுவனங்களை கடுமையாக எதிர்த்துள்ளனர். இதன் விளைவாக, டெஸ்லா கார் ஷோரூம்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

இந்த சூழ்நிலையில், எலான் மஸ்க் மற்றும் டெஸ்லா மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு எதிராக டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ட்ரம்ப தனது எக்ஸ் பக்கத்தில், எலான் மஸ்க் மற்றும் டெஸ்லாவை தாக்குபவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைப்பதை பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

ஒருவேளை அவர்கள் எல் சால்வடாரில் உள்ள சிறைகளுக்கு கூட செல்லப்படலாம். அது எவ்வளவு மோசமாக இருக்கும் என்று நான் சொல்லத் தேவையில்லை என பதிவிட்டுள்ளார். 

Related posts

41 நாடுகளிற்கு பயணத்தடை விதித்த அமெரிக்கா

admin

500000 மேற்ப்பட்ட சட்டவிரோதமாக குடியேறியோர்ர்க்கு நாடு கடத்தல் உத்தரவு விதித்த டிரம்ப்

admin

அமெரிக்காவின் கட்டளைக்கு செவி சாய்க்க மறுத்த ஈரான்

admin

Leave a Comment