13.6 C
Cañada
March 25, 2025
கனடா

டொரொண்டோ பல்கலைக்கழக வளாகத்தில் ஆண் ஒருவர் சடலம் மீட்பு

டொரொண்டோ பல்கலைக்கழகத்தின் டவுன்டவுன் வளாகத்தில் ஒரு ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் College Street இல் உள்ள Leslie L. Dan மருந்தியல் கட்டிடத்திற்கு வெளியில் காலை 8:20 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது. தொடக்கத்தில், இந்த மரணம் சந்தேகத்திற்குரியதல்ல என்று பொலிசார் கூறியிருந்தாலும், பின்னர் இது ஒரு கொலை என்று உறுதி செய்துள்ளனர்.

மருத்துவப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்திருந்தாலும், யாரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் அடையாளம் மற்றும் சம்பவத்தின் காரணம் குறித்து பொலிசார் இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை. டொரொண்டோ பொலிசார் மற்றும் பல்கலைக்கழக பாதுகாப்பு குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் காரணமாக பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என பொலிசார் அறிவித்துள்ளனர்.

Related posts

டெல்டா விமான விபத்து; பயணிகளுக்கு $30,000 இழப்பீடு

admin

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் அதிகரித்து வரும் முரண்பாடுகள்

admin

கனடா துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இலங்கை தமிழ்ப்பெண் உயிரிழப்பு

admin

Leave a Comment