17.4 C
Cañada
March 29, 2025
சினிமா

மூக்குத்தி அம்மன் 2 பட பூஜையின் போது ரெஜினாவை மிரட்டினாரா நயன்தாரா

நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவை கடந்தும், தற்போது பாலிவுட் மற்றும் கன்னட திரையுலகிலும் பிஸியாக நடித்து வருகிறார். ஜவான் படத்திற்குப் பிறகு, அவர் கன்னடம்-ஆங்கிலத்தில் உருவாகும் “டாக்ஸிக்” படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம், சுந்தர் சி இயக்கத்தில், ஐசரி கணேஷ் தயாரிப்பில் “மூக்குத்தி அம்மன் 2” படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

சமீபத்தில் நயன்தாராவைப் பற்றிய சில நெகட்டிவ் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில், “மூக்குத்தி அம்மன் 2” படத்தின் பூஜை விழாவில், நயன்தாரா மற்றும் ரெஜினா இடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் பிரச்சனை கவனம் பெற்றுள்ளது. நயன்தாரா, விழாவில் தனக்கு மட்டுமே முன்னுரிமை கிடைக்க வேண்டும் என எதிர்பார்த்ததாக கூறப்படுகிறது. ஆனால், மீனா, குஷ்பூ, ரெஜினா உள்ளிட்டவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்படுவதால் அவர் கோபமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், விழாவில் மீனா, நயன்தாராவுடன் பேச முயன்றபோதும், அவர் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனுடன், மேடையில் நயன்தாரா இருந்தபோது, ரெஜினா செல்ஃபி எடுத்ததால், அவர் கோபமடைந்து, பிறகு கேரவனுக்குள் சென்று ரெஜினாவிடம் போன் அழைப்பின் மூலம் அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுத்ததற்காக கண்டித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், ரெஜினா நயன்தாராவிடம் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நயன்தாராவின் மீதான புகார்கள் அதிகரித்து வருவதால், இயக்குநர் சுந்தர் சி குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது தலைக்கனம் மற்றும் நடத்தை எதிர்காலத்தில் அவருக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தக்கூடும் என்று சினிமா விமர்சகர்கள் கருதுகின்றனர். மேலும், பத்திரிக்கையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ், சக நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதே நயன்தாராவிற்கான முக்கிய பாடமாக இருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

Related posts

பிரமாண்டமான கோவில் செட் உடன் நடைபெற்ற ‘மூக்குத்தி அம்மன் 2’ பட பூஜை

admin

நடிகை செளந்தர்யா மரணம் விபத்தல்ல கொலை? பரபரப்பு கடிதம்

admin

சின்னத்திரை நயன்தாரானு இனி கூப்பிட வேண்டாம் என அறந்தாங்கி நிஷா தெரிவிப்பு

admin

Leave a Comment