இத்தாலியில் முழுவதுமாக செயற்கை நுண்ணறிவு (A.I.) தொழில்நுட்பத்தில் உருவான நாளிதழ் வெளியானது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் ஏ.ஐ. மிக வேகமாக வளர்ந்து, மனிதர்கள் நீண்ட நேரம் சிந்தித்து செய்யும் பணிகளை கண நேரத்தில் செய்துகாட்டி வருகிறது.
இந்நிலையில், இத்தாலியில் இருந்து வெளிவரும் “இல் போக்லியோ” நாளிதழ் நிறுவனம், முழுமையாக ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்ட நாளிதழை வெளியிட்டுள்ளது. இந்த 4 பக்க நாளிதழில் தலைப்புகள், செய்திகள், தொகுப்புகள், எழுத்துகள் என அனைத்தும் ஏ.ஐ. மூலமாக உருவாக்கப்பட்டது. செய்தியாளர்கள் செய்திகளை வழங்கினால் போதுமானது; ஏ.ஐ. அதை முழுமையாக வடிவமைக்கிறது.
முதல் பக்கத்தில் ரஷ்ய அதிபர் புதினின் 10 துரோகங்கள் போன்ற சுவாரஸ்யமான தலைப்புகளும், டிரம்ப்பை கிண்டலடிக்கும் செய்திகளும் இடம்பெற்றுள்ளன. மேலும், நாளிதழில் ஒரு இலக்கணப் பிழையும் இல்லாமல் எல்லா தகவல்களும் சரியாக இடம்பெற்றுள்ளன என்பது மிகவும் கவனிக்கத்தக்கது.
இதேபோல், ஏ.ஐ. தொழில்நுட்பம் கணினித் துறை மட்டுமின்றி, கல்வி, மருத்துவம், ராணுவம் போன்ற பல்வேறு துறைகளிலும் வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது.