இந்தோனேசியாவின் கிழக்கு நுஸா தெங்காரா மாகாணத்தில் உள்ள ஃப்ளோரஸ் தீவில், லெவோடோபி லகி லகி எரிமலை வெடித்துள்ளது. இதன் காரணமாக, அந்த பகுதியின் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த எரிமலை மூன்று முறை வெடித்ததாகவும், சுமார் 26 ஆயிரம் அடி உயரத்திற்கு தீக்குழம்புகள் எழும்பி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலால், அவுஸ்திரேலியா-இந்தோனேசியா இடையிலான பல விமானங்கள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டன.
மேலும், அந்த பகுதியிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக செல்லும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். எரிமலை வெடிப்பினால் முழு பகுதியும் கரும்புகையால் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.