நாயகி என்றால் வெள்ளையாக, அழகாக, பளபளப்பாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த காலத்தில், நடிகை சாய் பல்லவி தனக்கென தனி இடத்தை உருவாக்கிக்கொண்டார். எந்த ஒரு பந்தாவும் இல்லாமல், அவருக்கே உரிய சாதாரணமான, அழுத்தமான கதைகளை தேர்வு செய்து, தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் அவர்.
சாய் பல்லவியின் தனித்துவமான வாழ்க்கை முறையைப் பற்றியும் ஒரு சமீபத்திய பேட்டியில் அவர் பேசியுள்ளார். “நான் இரவு 9 மணிக்கு தூங்கி, காலை 4 மணிக்கு எழுந்துவிடுவேன். இதற்கான காரணம் எனக்கே தெரியவில்லை. ஆனால், நான் படிப்பு மற்றும் வேலை காரணமாக இதற்கு பழகிவிட்டேன்” என அவர் கூறினார்.
அவர் ஜார்ஜியாவில் படிக்கும்போது காலை 3.30 மணிக்கு எழுந்து படிப்பது ஒரு வழக்கமாக இருந்ததாகவும், அது தொடர்ந்து அவரது வாழ்க்கையில் ஒரு செயல்முறையாக மாறிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பல படப்பிடிப்புகள் இரவு 9 மணிக்கு மேல் சென்றால், அவர் “அடம் பிடித்து தூங்க சென்று விடுவேன்” எனவும், தன் உறக்க நேரத்தை எந்தவிதத்திலும் மாற்றிக்கொள்ள மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.