இலங்கையில் குடும்ப வைத்தியர் யோசனை அறிமுகம் செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த திட்டத்தின் நோக்கம் ஆரம்ப சுகாதார சேவைகளை வலுப்படுத்தி, மக்களுக்கு வினைத்திறனான மருத்துவ சேவைகளை வழங்குவது என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜயமுனி தெரிவித்துள்ளார்.
இதன் கீழ், கிராம அலுவலர் 3 களங்களுக்கும் தலா ஒரு வைத்தியர் நியமிக்கப்படவும், அதற்கென தனி மருத்துவ மையம் அமைக்கும் திட்டம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, இந்த திட்டம் காலி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.