6.6 C
Cañada
March 22, 2025
கனடா

கனடாவில் கொலை சதி: இரண்டு தமிழ் இளைஞர்கள் கைது!

கனடாவில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் இரண்டு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 25 வயதான கோகிலன் பாலமுரளி (ஒன்டாரியோ மார்க்கம்) மற்றும் 25 வயதான பிரன்னன் ஸ்கந்த பாலசேகர் (நோர்த் யோர்க்) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பிக்கரிங் நகரில் கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில் டொரொன்டோ பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர்.

Mansion Kitchen and Bar இல் ஒருவரை இலக்கு வைத்து கொலை செய்ய திட்டமிடப்பட்டதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து, இருவரும் முதல் நிலை கொலை குற்றச்சாட்டில் கைதாகியுள்ளனர். எனினும், குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான விமானம்; 18 பேர் காயம்

admin

அமெரிக்காவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற கனேடிய ஹொக்கி அணி

admin

டிரம்ப் மற்றும் மஸ்கிற்கு எதிராக போராட்டத்தில் கனடா

admin

Leave a Comment