சூர்யா, இயக்குநர் ஆர்.ஜே பாலாஜி இணையும் “சூர்யா 45” படத்தின் படப்பிடிப்பு பரவலாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க, இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை ஜி.கே விஷ்ணு மேற்கொள்கிறார். தற்போது ஐதராபாத் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அடுத்த கட்டமாக சென்னை ஈசிஆரில் பெரிய திருவிழா செட் அமைத்து ஒரு பாடல் படமாக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் சூர்யா, திரிஷா இணைந்து குத்து பாடலுக்கு நடனமாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாடலுக்காக 500 நடனக் கலைஞர்கள் பங்கேற்க, பல கோடி செலவில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஃபேண்டசி கதைக்களத்துடன் உருவாகும் இந்தப் படத்தில் ஸ்வசிகா, மலையாள நடிகர் இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சூர்யா 45 படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.