மாத்தறை – தேவேந்திரமுனை பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
உந்துருளியில் பயணித்த இருவரை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு வேனில் வந்த குழு அவர்களை துப்பாக்கிச்சூட்டில் தாக்கியதுடன், தப்பிச் சென்று சிறிது தூரத்தில் அந்த வேனை தீ வைத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் 28 மற்றும் 29 வயதுடையவர்கள் என்றும் அவர்கள் மாத்தறை – தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அறியப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.