9.1 C
Cañada
March 31, 2025
உலகம்

Snickers சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட பிரித்தானியர்

பிரித்தானியாவை சேர்ந்த 55 வயது பால் புரூம் தனது நகைச்சுவை உணர்வுக்காக பெயர் பெற்றவர். அவர் தனது இறப்பிற்கு முன்பு, தன்னை ஒரு Snickers சொக்லேட் வடிவ சவப்பெட்டியில் அடக்கம் செய்ய வேண்டும் என்று நகைச்சுவையாக கூறியிருந்தார். இதை அவரது குடும்பத்தினர் மறக்காமல் நினைவில் கொண்டு, அவரது இறுதிச்சடங்கின்போது அதேபடி செய்து அவரின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளனர்.

அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், அவரது நகைச்சுவை உணர்வை போற்றும் வகையில், Snickers வடிவில் ஒரு தனிப்பட்ட சவப்பெட்டியை தயாரித்து அதில் “I’m Nuts” என்ற வாசகத்தையும் சேர்த்துள்ளனர். இந்த வாசகம் பால் புரூமின் நகைச்சுவை தன்மையை பிரதிபலிக்கிறது.

கிரிஸ்டல் பாலஸ் FC கால்பந்து அணியின் தீவிர ரசிகரான பால், 40-க்கும் மேற்பட்ட அணி ஜெர்ஸிகளை சேகரித்து வைத்திருந்தார். அவருடைய சவப்பெட்டியில் அந்த அணியின் லோகோ பதிக்கப்பட்டிருந்தது. அவரது இறுதி ஊர்வலத்தில், அவருடைய நண்பர்கள் கைத்தட்டல்களுடன் அவரை அனுப்பி வைத்தனர்.

இறப்பதற்கு முன்பு, பால் புரூம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய ஒரு பராமரிப்பு உதவியாளராக பணியாற்றியவர். அவரது இந்த வித்யாசமான இறுதி மரியாதை, அவரின் நகைச்சுவை உணர்வை என்றும் நினைவுகூர செய்யும் ஒரு நினைவுச் சின்னமாக மாறியுள்ளது.

Related posts

அமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவையில் 6,700 ஊழியர்கள் பணிநீக்கம்!

admin

போர் நிறுத்தம் அமலுக்கு வருமா? போர் மீண்டும் தொடருமா?

admin

அர்ஜென்டினாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலி

admin

Leave a Comment