17.4 C
Cañada
March 31, 2025
உலகம்

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா அமைப்பினர்

காசா மீதான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா போராளிகள் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை, லெபனானிலிருந்து வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதற்குத் பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. இதனுடன், இஸ்ரேலிய நகரமான மெதுலா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இது பாதுகாப்புப் படைகளால் பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஏழு வாரங்கள் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தது. ஆனால், அதன் நீடிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காததால், காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் தாக்குதல்கள் மேலும் தீவிரமாகும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

Related posts

காசாவில் ஹமாஸினை வெளியேறக் கோரி மேற்கொள்ளப்பட்ட மக்கள் போராட்டம்

admin

அர்ஜென்டினாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலி

admin

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறியோரின் சட்ட பாதுகாப்பு ரத்து

admin

Leave a Comment