காசாவில் இஸ்ரேல் நடத்திய கடுமையான தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய அரசியல் தலைவர் சலா அல்-பர்தவீல் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காசாவின் கான் யூனிஸ் நகரில் நடைபெற்ற இந்த தாக்குதலில், பர்தவீல் மற்றும் அவரது மனைவி உயிரிழந்தனர். இது போன்ற தாக்குதல்களில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்கள் ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்திற்கு பின்னர் தொடங்கியுள்ளன, மேலும் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பின் ராணுவ கட்டமைப்பை அழிப்பதை தனது முக்கிய குறிக்கோளாக வைத்துள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, தெற்கு காசாவில் ஹமாஸ் ராணுவ உளவுத்துறை தலைவர் இஸ்ரேல் இராணுவத்தால் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது, இதனால் பகுதி முழுவதும் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இந்த தாக்குதல்கள் தொடர்பாக ஹமாஸ் ஆதரவு ஊடகங்களும் தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளன.