ஈரான் மீது அமெரிக்கா செலுத்தும் கடுமையான அழுத்தத்தின் காரணமாக, உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வேகமாக உயர்ந்து வருகின்றன.
இந்த நிலைமை இலங்கையிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 72 டொலர்களைத் தாண்டி, நேற்று (22) 72.16 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
தற்போது உருவாகியுள்ள இந்த பொருளாதார சூழ்நிலையில், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.