சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிடிகொட பெல்லன வத்த பகுதியில் உள்ள ஹோட்டலில், பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.
நேற்று (22) இரவு நடந்த இந்த சுற்றிவளைப்பில், 15 பெண்கள் உட்பட மொத்தம் 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள், கேரளா கஞ்சா மற்றும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. சிகரெட்டுகளை வைத்திருந்த 03 பெண்கள் மற்றும் 14 ஆண்கள் தனிப்பட்ட முறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாகவும், கொழும்பின் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது, சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.