8 C
Cañada
March 25, 2025
சினிமா

2026 பொங்கல் ரிலீசாகவுள்ள தளபதி விஜயின் ‘ஜனநாயகன்’ vs சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படம், அவரது கடைசி படமாக இருக்கும். இந்த படத்தை முடித்தவுடன், விஜய் முழுமையாக அரசியலில் களமிறங்க உள்ளார்.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் மேனன், பாபி தியோல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். முதலில் இப்படம் இந்த ஆண்டில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது 2026 பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் 2026 பொங்கலுக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதே நாளில் நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படமும் வெளியாகும் என கூறப்படுகிறது.

பராசக்தி திரைப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருக்கிறார். இதில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் இதை 2026 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Related posts

ராஷ்மிகாவின் மகளுடனும் நடிப்பேன் எனக் கூறிய சல்மான் கான்

admin

மூக்குத்தி அம்மன் 2 பட பூஜையின் போது ரெஜினாவை மிரட்டினாரா நயன்தாரா

admin

பிரியங்கா குறித்து மேடையில் திவ்யதர்ஷினி ஓபன் டாக்

admin

Leave a Comment