5.7 C
Cañada
March 29, 2025
உலகம்

500000 மேற்ப்பட்ட சட்டவிரோதமாக குடியேறியோர்ர்க்கு நாடு கடத்தல் உத்தரவு விதித்த டிரம்ப்

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய சுமார் 5 லட்சம் பேரின் தற்காலிக அனுமதியை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில், இவர்கள் கைது செய்யப்பட்டு, சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். இந்த விவகாரத்தில், 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை, கியூபா, ஹைதி, நிகரகுவா, வெனிசுலா நாடுகளைச் சேர்ந்த 5,32,000 பேருக்கு வழங்கப்பட்ட தற்காலிக சட்ட பாதுகாப்பை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இந்த நபர்கள் ஏப்ரல் 24-ம் தேதி அல்லது அதற்குப் பிறகு தங்களின் சட்ட பாதுகாப்பை இழப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருக்கும் மக்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று உறுதி அளித்துள்ளார். தற்போது, அவர் இந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறார், மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் அமெரிக்காவிற்கு சட்டப்பூர்வமாக வரும் வழிகளையும் அவர் கடுமையாக்கியுள்ளார்.

Related posts

அமெரிக்காவில் சுவாமி நாராயணன் கோவில் மீது தாக்குதல்

admin

அமெரிக்கா மற்றும் கனடா வரி விதிப்பை ஒரு மாதத்திற்கு ஒத்திவைப்பு

admin

அணுசக்தி ஒப்பந்தம் குறித்த டிரம்ப் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்-அயதுல்லா அலி

admin

Leave a Comment