தென்னிந்திய திரைப்படங்களில் கலக்கி வந்த நடிகை கீர்த்தி சுரேஷ், பேபி ஜான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இது அவருடைய முதல் ஹிந்தி படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் பெரிய தோல்வியடைந்து, பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பேபி ஜான் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொண்ட கீர்த்தி சுரேஷ், அதே நேரத்தில் சாவா திரைப்படத்தை நிராகரித்துள்ளார். சாவா ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான படம். இதில் விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்ற இப்படம், உலகளவில் ரூ. 760 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஆனால், முதலில் ராஷ்மிகா மந்தனா நடித்த கதாபாத்திரத்திற்கு கீர்த்தி சுரேஷே தேர்வாகியிருந்தார். ஆனால், அதை அவர் நிராகரித்துவிட்டார் என்றும், அந்த சமயத்தில் பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.