13.2 C
Cañada
March 26, 2025
விளையாட்டு

IPL 2025 போட்டியில் புதிய வரலாறு படைத்த விராட் கோஹ்லி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில், விராட் கோஹ்லி அரைசதம் விளாசி வரலாற்று சாதனை படைத்தார். ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2025 இன் முதல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

முதலில் ஆடிய கொல்கத்தா அணி 174 ஓட்டங்கள் எடுத்தது, பின்னர் பெங்களூரு அணி, விராட் கோஹ்லி 59 ஓட்டங்களும், பிலிப் சால்ட் 56 ஓட்டங்களும் விளாசி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில், கோஹ்லி புதிய சாதனை ஒன்றை படைத்தார். அவர் நான்கு அணிகளுக்கு எதிராக 1000 ஓட்டங்கள் விளாசிய முதல் வீரர் ஆவார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 1,053 ஓட்டங்களும், டெல்லி கேபிட்டல்ஸுக்கு எதிராக 1,057 ஓட்டங்களும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 1,030 ஓட்டங்களும், கொல்கத்தா அணிக்கு எதிராக 1,021 ஓட்டங்களும் கோஹ்லி எடுத்துள்ளார்.

கோஹ்லி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 1000 ஓட்டங்கள் எட்டிய மூன்றாவது வீரராகவும் வருகிறார். இதற்கு முன்பு, ரோஹித் ஷர்மா (1070 ஓட்டங்கள்) மற்றும் டேவிட் வார்னர் (1093 ஓட்டங்கள்) மட்டுமே இந்த சாதனையை பெற்றிருந்தனர்.

Related posts

இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடரில் சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ரஷிய வீராங்கனை

admin

மைதானத்தில் ஏற்ப்பட்ட நெஞ்சு வலி – வங்கதேச வீரர் தமீம் இக்பால் மருத்துவமனையில் அனுமதி

admin

பெங்களூரு அணியை வீழ்த்திய மும்பை அணி

admin

Leave a Comment