13.2 C
Cañada
March 26, 2025
உலகம்

ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவுக்கு பயணம் செய்யும் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

பல ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவிற்கு பயணம் செய்யும் தங்களின் குடிமக்களுக்கு பயண எச்சரிக்கைகள் விடுத்துள்ளன. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, அமெரிக்காவின் எல்லைக் கொள்கைகள் கடுமையாக்கப்பட்டு, வெளிநாட்டவர்களுக்கு சிக்கல்களை உருவாக்கியுள்ளன. ட்ரம்பின் நிர்வாகம், விசா சரிபார்ப்பு செயல்முறைகளை கடுமையாக்கி, சட்டவிரோத புலம்பெயர்ந்தோர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியுள்ளது.

கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஜாஸ்மின் மூனி, அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் விசாவிற்கு விண்ணப்பித்ததன் பின்னர், தடுப்பு மையங்களில் 2 வாரங்கள் கழித்தார். மேலும், மார்ச் 9 ம் திகதி அமெரிக்க எல்லை அதிகாரிகள் பிரெஞ்சு விண்வெளி விஞ்ஞானி ஒருவர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாட்டில் தங்கியிருந்ததைத் தடுத்து, அவரை நாடு கடத்தினர், அவர் மீது அமெரிக்கக் கொள்கைக்கு எதிராக செய்திகளை எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலைகளில், பிரித்தானியா தனது குடிமக்களுக்கு அமெரிக்காவை சேர்ந்த அனைத்து நிபந்தனைகளுக்கும் ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஜேர்மனி தமது குடிமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையில் விசா அல்லது நுழைவு விலக்கு என்பது அமெரிக்காவில் நுழைவுக்கு உத்தரவாதம் அளிக்காது என குறிப்பிட்டுள்ளது.

டென்மார்க் மற்றும் பின்லாந்து, திருநங்கை என அடையாளம் காணப்பட்ட பயணிகளுக்கு அமெரிக்க தூதரகத்தை தொடர்பு கொள்ளவேண்டும் என எச்சரித்துள்ளன. இந்த நிலையில், 30 நாட்களுக்கு மேலாக அமெரிக்காவில் தங்கியிருக்க திட்டமிடும் கனேடியர்கள், அமெரிக்க அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் உண்டாகியுள்ளது.

Related posts

அமெரிக்காவில் சூறாவளியால் 34 பேர் பலி.. இருளில் மூழ்கிய லட்சம் வீடுகள்

admin

உக்ரைனுக்கு கூடுதலாக 3 பில்லியன் யூரோ – ஜேர்மனியின் புதிய உதவித் திட்டம்

admin

அமெரிக்க பணயக் கைதியை விடுவிப்பதற்கான ட்ரம்பின் கோரிக்கைக்கு ஹமாஸ் ஒப்புதல்

admin

Leave a Comment