17.9 C
Cañada
April 1, 2025
இலங்கை

இலங்கையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் ஸ்டார்லிங் இணைய சேவை

இலங்கையில் எலோன் மஸ்க்கின் ‘Starlink’ செயற்கைக்கோள் இணைய சேவையின் செயல்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இது, தேசிய பாதுகாப்பு மற்றும் அரச நிறுவனங்களின் தொடர்புத் தகவல்களை பாதுகாக்கும் உரிமைகளை உறுதி செய்யும் பணிகள் முடியும் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம், சில தனிநபர்கள் இந்த செயற்கைக்கோள் இணைய சேவையை சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்களை உருவாக்கலாம் எனக் கருதுகிறது. இதன் பின்னணியில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை திணைக்களம் ஸ்டார்லிங்குடன் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்துவருகின்றன.

ஸ்டார்லிங் நிறுவனத்திற்கு இலங்கையில் இணைய சேவை வழங்க அனுமதி கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வழங்கப்பட்டது. இதன் தொடர்பில் புதிய சட்டமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related posts

பெண் மருத்துவரை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய சந்தேகநபர் வாக்குமூலம்

admin

படலந்த விவகாரத்தினை முன்னிட்டு ரணிலின் குடியுரிமையை இரத்து செய்ய கோரிக்கை

admin

ஹசீஸ் போதைப்பொருளுடன் கைதான கனேடிய பெண்

admin

Leave a Comment