விஜய் நடிக்கும் படங்களுக்கு ப்ரீ பிஸினஸ் மிகவும் பெரிய அளவில் உள்ளது. கடந்த சில படங்களின் ப்ரீ பிஸினஸ் தயாரிப்பாளர்களுக்கு படத்தின் ரிலீஸுக்கு முன்பே லாபத்தைக் கொடுத்துள்ளது. அதேபோல், “கோட்” படம் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு “Table profit” ஆக அமைந்ததாக அர்ச்சனா கல்பாத்தி கூறியிருந்தார்.
விஜய் நடிக்கும் அடுத்த படம் “ஜனநாயகன்”, இது விஜய்யின் கடைசி படம் ஆகும். இதன் பின் அவர் முழுமையாக அரசியலில் களமிறங்கவுள்ளார். இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய்யுடன் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், கவுதம் மேனன், ப்ரியாமணி போன்ற நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், “ஜனநாயகன்” திரைப்படத்தின் OTT உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த படத்தை நெட்பிளிக்ஸ் ரூ. 80 கோடி கொடுத்து வாங்கியதாக திரை வட்டாரத்தில் தகவல்கள் வருகின்றன. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவருமென கூறப்படுகிறது.