கண்டியில் உள்ள தலதா மாளிகை குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் விளம்பரம் பொய்யானது என தலதா மாளிகையின் பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தலதா மாளிகைக்கு நன்கொடை வழங்க விரும்புவோர் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாம் எனும் தகவல் சமூக ஊடகங்களில் பரவிவருகிறது. ஆனால், இந்த விளம்பரம் உண்மையல்ல எனவும், தலதா மாளிகைக்கு அரசாங்கத்தால் நன்கொடை வழங்கப்படுவதாகவும் பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இத்தகைய போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.