தென்னாபிரிக்காவின் சால்தானா பகுதியில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜேம்ஸ் கானெல் என்ற விமானி, அபாயகரமான சாகசங்களில் ஈடுபட்டிருந்தார்.
அவர் இம்பாலா மார்க் 1 ரக விமானத்தில் உயரமாக பறந்து, விமானத்தை சுழற்றியபோது நிலை தடுமாறியது. கட்டுப்பாட்டை இழந்த விமானம் வேகமாக கீழே விழுந்து நொறுங்கியது.
விபத்து நடந்ததும், நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் இருந்த மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விமானத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தினர்.
மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள், விமானியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.