பிராம்ப்டனில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக, $1.45 மில்லியன் மதிப்புள்ள திருடப்பட்ட டிராக்டர்களும் டிரெய்லர்களும் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, 50 வயது இந்திரஜித் சிங் வாலியா மற்றும் 43 வயது நரீந்தர் ஷோக்கர் ஆகியோருக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மார்ச் 11 அன்று, டெர்ரி ரோடு ஈஸ்ட் மற்றும் பெக்கெட் டிரைவ் அருகே உள்ள ஒரு டிரக்கிங் யார்டிலும் சரக்கு வாகன திருத்தும் மையத்திலும் நடந்த மோசடிக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டது. இதன் போது, 14 திருத்தப்பட்ட டிரெய்லர்கள், 3 திருத்தப்பட்ட சரக்கு வாகனங்கள், 1 திருடப்பட்ட டிரெய்லர் மற்றும் 2 திருடப்பட்ட டிரான்ஸ்போர்ட் வாகனங்கள் மீட்கப்பட்டன.
மேலும், கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு டிரெய்லர்களில் குளிரூட்டப்பட்ட அறைகளில் ரஸ்பெர்ரி பழங்களும் மாட்டிறைச்சியும் இருந்ததாக தெரிய வந்துள்ளது. மீட்கப்பட்ட அனைத்து வாகனங்களையும் உரிய நிறுவனங்களுக்கு போலீசார் திருப்பி வழங்கியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதோடு, மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.