15.2 C
Cañada
March 29, 2025
சினிமா

ராஷ்மிகாவின் மகளுடனும் நடிப்பேன் எனக் கூறிய சல்மான் கான்

பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான், தற்போது “சிக்கந்தர்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி, சல்மான் கானுடன் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்துள்ளார். மேலும், காஜல் அகர்வால், சத்யராஜ், கிஷோர் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதில் 59 வயதாகும் சல்மான் கான் 28 வயதாகும் ராஷ்மிகா மந்தனாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இருவருக்கும் இடையேயுள்ள 31 வயது வித்தியாசத்தினைக் காரணமாக “மகள் வயதாகும் ராஷ்மிகாவுடன் ஜோடியாக நடிக்கிறாரா?” என்று கேள்விகள் எழுந்தன.

இந்த நிலைமையில், “சிக்கந்தர்” திரைப்படத்தின் டிரைலர் வெளியிடும் விழாவில், சல்மான் கான் இதில் பேசினார். “ஹீரோயினுக்கும் எனக்கும் இடையே 31 வயது வித்தியாசம் உள்ளது என பேசுகிறார்கள். ஆனால், ராஷ்மிகாவுக்கு அதில் பிரச்சனை இல்லை, அவர் அப்பாவுக்கும் அதில் பிரச்சனை இல்லை. எனவே உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று கூறினார். மேலும், “ராஷ்மிகா திருமணம் செய்து மகளைப் பெற்றால், அவருடன் சேர்ந்து நடிப்பேன்” என சல்மான் கான் பதிலடி அளித்தார். அவரது இந்த பதிலடி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Related posts

நடிகை செளந்தர்யா மரணம் விபத்தல்ல கொலை? பரபரப்பு கடிதம்

admin

சூர்யா 45: சாய் அபயங்கர் இசையில் செம்ம குத்து பாடல்!

admin

பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் 100 கோடியை தாண்டி வசூல் சாதனை

admin

Leave a Comment