இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜெயசூர்யா, மற்றும் கருணா அம்மான் ஆகியோர் மீது தடை விதிப்பதாக பிரித்தானியா வெளியுறவு அலுவலகம் அறிவித்துள்ளது.
உள்நாட்டுப் போரின் போது செய்யப்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூறலைக் கோருவதையும், தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் கலாச்சாரத்தைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மனித உரிமைகள் தொடர்பான இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற பிரித்தானியா உறுதிபூண்டுள்ளது. மேலும் பயணத்தடை மற்றும் சொத்து முடக்கம் ஆகிய நடவடிக்கைகள், இந்த தடையில் அடங்கியுள்ளன.