6.7 C
Cañada
March 26, 2025
உலகம்

ஒரே நாளில் 1000 கோல்டு கார்டு விசா விற்பனை

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் அறிவித்த கோல்டு கார்டு விசா திட்டத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரே நாளில் 1,000 கோல்டு கார்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பெப்ரவரி மாதம், டிரம்ப் Gold Card Visa (தங்க அட்டை விசா) திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இது அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற விரும்புபவர்களுக்கு வழங்கப்படும் விசாவாகும். இந்த விசாவை பெறுவதற்காக 5 மில்லியன் அமெரிக்க டாலர் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிரீன் கார்டுடன் ஒப்பிடும்போது, இதில் மேலும் அதிக வசதிகள் உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்காவின் கோல்டு கார்டு விசா திட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் கூறுகையில், ஒரே நாளில் 1,000 கோல்டு கார்டுகள் விற்பனை ஆகியுள்ளன. மேலும், இதைப் பெற ஆர்வம் கொண்ட பலர் இன்னும் வரிசையில் நிற்பதாக அவர் தெரிவித்தார்.

Related posts

அமெரிக்க பணயக் கைதியை விடுவிப்பதற்கான ட்ரம்பின் கோரிக்கைக்கு ஹமாஸ் ஒப்புதல்

admin

அர்ஜென்டினாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலி

admin

15,000 ஹெக்டேயர் நிலப்பரப்பை தீக்கிரையாக்கிய தென் கொரியா காட்டுத்தீ

admin

Leave a Comment