சென் கத்தரின்ஸ் நகரில் இன்று அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கார்ல்டன் வீதி மற்றும் அத்லோன் பிளேஸ் அருகே, குவீன் எலிசபெத் வேயின் அருகில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கான காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலீசார் இதுவரை எந்த சந்தேகத்தையும் வெளியிடவில்லை, மேலும் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதால், சம்பவ இடத்தில் அதிக பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.