13.2 C
Cañada
March 26, 2025
சினிமா

குக் வித் கோமாளி சீசன் 6 இல் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்

இன்றைய பிஸியான வாழ்க்கையில் மக்கள் அனைவருமே சிரிப்பதை மறந்துவிட்டார்கள். வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருப்பதால் மகிழ்ச்சியைக் கூட நினைவுகூர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இப்படியான சூழலில் மக்கள் விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நிகழ்ச்சியாக விஜய் டிவியின் குக் வித் கோமாளி இருந்தது.

சமையல் மற்றும் கலாட்டாவை ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை நிறைவு செய்துள்ளது. ஆனால், ரசிகர்களுக்கு அதிகமாக பிடிக்காத சீசன் என்றால் அது 5 ஆவது சீசனே என கூறலாம். இந்த சீசனில் புதுமையான அம்சங்கள் குறைவாக இருந்ததால் மக்களுக்கு சற்று எதிர்பார்ப்புக்கு குறைவாகவே தோன்றியது.

இந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 6 பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை ஷகீலா, ஒரு நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜை சந்தித்தபோது, அவரிடம் 6 ஆவது சீசன் எப்போது தொடங்கும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், ஏப்ரல் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த 6 ஆவது சீசனில் தொகுப்பாளராக ஜாக்குலின் களமிறங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள புதிய அம்சங்களுடன் சீசன் 6 வந்து மக்களை மீண்டும் மகிழ்விக்குமா என்பதற்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.

Related posts

2 நாட்களில் டிராகன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

admin

பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் 100 கோடியை தாண்டி வசூல் சாதனை

admin

மூக்குத்தி அம்மன் 2 பட பூஜையின் போது ரெஜினாவை மிரட்டினாரா நயன்தாரா

admin

Leave a Comment