8.3 C
Cañada
March 28, 2025
ஐரோப்பா

பிரித்தானிய வானில் தோன்றிய மர்ம சூழல் வடிவ ஒளியால் ஏற்ப்பட்ட குழப்பம்

பிரித்தானியாவின் வானத்தில் மர்மமான ஒளி மிளிர்ந்தது, பலரும் அதை UFO (வேற்றுகிரக விண்கலம்) என கருதினர். மாண்ட்செஸ்டர், டெர்பிஷைர், யார்க்ஷையர் உள்ளிட்ட வடக்கு பிரதேசங்களில் இந்த மர்ம ஒளி தெரிந்தது, மேலும் சமூக வலைதளங்களில் இதுகுறித்து பல வினோதமான கருத்துகள் பரவின.

காட்சியைக் கண்டவர்கள், “இது வானில் மெதுவாக நகர்ந்து மறைந்தது”, “நாங்கள் பார்ப்பதற்குள் இரண்டு நிமிடங்களில் மறைந்துவிட்டது” என பகிர்ந்தனர். இதனால், இது அதிசய விண்கலம் என எண்ணிய பலருக்கு குழப்பம் ஏற்பட்டது.

இதற்கான விளக்கம் விரைவில் தெரியவந்தது. இது SpaceX Falcon 9 ரொக்கெட் ஏவுதலால் உருவானது. அமெரிக்காவின் NROL-69 ரகசிய திட்டத்தின் கீழ் கேப் கானாவெரலில் இருந்து இந்த ரொக்கெட் புறப்பட்டிருந்தது. அதன் பின்னர், தேவையற்ற எரிபொருளை வெளியேற்றியதால், அது உலக சுற்றுச்சூழலில் உறைந்து, சூரிய ஒளியை பிரதிபலித்து வானத்தில் சுழல் வடிவ ஒளிவட்டமாக தோன்றியது. இதேபோன்ற நிகழ்வு 2023-ல் அமெரிக்காவில் ஏற்பட்டது.

Met Office இதை ‘Rocket Ice Cloud’ என விளக்கியது. ரொக்கெட் வெளியேற்றும் உறைந்த நீராவி, சூரிய ஒளியை பிரதிபலிப்பதால் இப்படியான ஒளிவட்டம் உருவாகிறது என்று கூறப்பட்டது.

Related posts

பிரித்தானியாவில் கடலில் நேருக்கு நேர் மோதிய கப்பல்கள்

admin

வைரஸ் தொற்று தொடர்பில் பிரித்தானியாவுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

admin

ஐரோப்பாவில் இஸ்ரேல்-காஸா போரை முடிவுக்கு கொண்டுவரக் கோரி மக்கள் போராட்டம்

admin

Leave a Comment