எலான் மஸ்கின் பிள்ளைகளில் ஒருவர், சேவியர் அலெக்சாண்டர் மஸ்க், 18 வயதானதும் தனது பெயரை விவியன் ஜென்னா வில்சன் என மாற்றிக்கொண்டு, தன்னை பெண்ணாக அறிவித்தார். தற்போது 20 வயதாகியுள்ள விவியன், தனது திருநங்கை அடையாளத்தை தாய் ஜஸ்டின் வில்சன் முழுமையாக ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
எனினும், தன் தந்தையான எலான் மஸ்க் இதனை விரும்பவில்லை என்றும், தன்னுடைய மாற்றத்துக்கு அவர் ஆதரவளிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். ஹார்மோன் சிகிச்சை போன்ற விஷயங்களில் தந்தையின் அனுமதி தேவைப்பட்ட நேரத்தில், பல மாதங்களாக எலான் மஸ்குடன் பேசவில்லை என்றும் விவியன் தெரிவித்தார்.
மேலும், தந்தையுடன் இனி எந்த தொடர்பும் வேண்டாம் என்பதற்காகவே தனது பெயரிலிருந்து “மஸ்க்” என்பதை நீக்கி, தாய் ஜஸ்டின் வில்சனின் பெயரை இணைத்துக் கொண்டதாகவும் விவியன் கூறியுள்ளார்.