உக்ரைனின் துல்லியமான தாக்குதலில், ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் நான்கு ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலின் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்த தாக்குதல் ரஷ்யாவுக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்துள்ளது. வெப்ப மற்றும் அகச்சிவப்பு காமிரா மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களில், ரஷ்ய தேசியக் கொடியுடன் கூடிய இரண்டு ஹெலிகாப்டர்கள் தாக்குதலுக்கு இலக்கானதை தெளிவாக காணலாம். தகவலின்படி, இந்த தாக்குதல் HIMARS ஏவுகணை மூலம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் விளைவாக, சுமார் $16 மில்லியன் மதிப்புள்ள இரண்டு Ka-52 தாக்குதல் ஹெலிகாப்டர்களும், இரண்டு Mi-8 போக்குவரத்து ஹெலிகாப்டர்களும் முழுமையாக அழிந்துவிட்டன. ஆகஸ்ட் 2024 முதல், உக்ரைன் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்திற்குள் ஊடுருவியதைத் தொடர்ந்து, பெல்கோரோட் பகுதியில் தனது தாக்குதலை அதிகரித்துள்ளது.