ரஷ்யாவின் Oryol நகரில் மக்கள்தொகை மிகக் குறைவாக உள்ளது, வெறும் 8,000 பேர் மட்டுமே வாழ்கின்றனர். இதனால், மக்கள்தொகையை அதிகரிப்பதற்காக, ரஷ்ய ஜனாதிபதி புடின் கர்ப்பமான இளம்பெண்களுக்கு 1,000 பவுண்டுகள் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
அதாவது, எந்த வயதினரானாலும், கர்ப்பமுற்ற பெண்களுக்கு இந்த நிதி வழங்கப்படும், ஆனால் 12 வாரங்கள் கர்ப்பமாக இருப்பதை நிரூபிக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் பல்கலைக்கழக மாணவிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பள்ளி மாணவிகளுக்கும் இதே திட்டத்தில் 100,000 ரூபிள்கள் (920 பவுண்டுகள்) வழங்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்திற்கு மாணவிகளுக்கு கர்ப்பமுறும் குறைந்த பட்ச வயது வரம்பு இல்லை.
ரஷ்யாவில் பிறப்பு வீதம் குறைந்திருப்பதால், எதிர்காலத்தில் ராணுவத்திற்கு வீரர்கள் தேவை என்பதற்காக, பெண்கள் எந்த வயதினரானாலும், குழந்தை பெற்றுக்கொள்ளும் வழியில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.