9.6 C
Cañada
March 29, 2025
சினிமா

டிராகன் குறித்து அஸ்வத் மாரிமுத்துவைச் சந்தித்து வாழ்த்து கூறிய விஜய்

நடிகர் விஜய்க்கு உலகம் முழுவதும் கோடி கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரின் ரசிகர்கள் மட்டும் இல்லாமல், சினிமா துறையின் முக்கிய பிரபலங்களும் விஜய்யின் ரசிகர்களாக இருக்கின்றனர். அதில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து விஜய்யின் தீவிர ரசிகர்களில் ஒருவர். சமீபத்தில் அவர் இயக்கிய “டிராகன்” படம் பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று அஸ்வத் மாரிமுத்து விஜய்யை சந்தித்துள்ளார். அவருடன் எடுத்த போட்டோவை வெளியிட்டு அஸ்வத் மிகவும் உணர்ச்சியுடன் பேசினார். விஜய்யை பார்த்ததும் அவரது கண்கள் கலங்கியதாக கூறி விஜய் உடன் பணியாற்ற வேண்டும் என்று கடினமாக உழைத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அஸ்வத் கூறியதாவது, “என் கையில் விஜய் உடன் பணியாற்றுவது இல்லை, ஆனால் அவரை சந்தித்துவிட்டேன். அவர் எதிரில் அமர்ந்த போது எனக்கு கண்களில் கண்ணீர் வழிந்தது. ‘GREAT WRITING BRO’ என விஜய் சொன்னார். அது போதும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

2 நாட்களில் டிராகன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

admin

நடிகர் பிரபாஸிற்கு தொழிலதிபர் மகளுடன் திருமணமா?

admin

700 கோடிக்கும் மேல் வசூல் செய்த படத்தை நிராகரித்த கீர்த்தி சுரேஷ்

admin

Leave a Comment