11.3 C
Cañada
April 3, 2025
இலங்கை

இலங்கையில் இளைஞர் யுவதிகளிடையே அதிகரித்து வரும் மனநல பிரச்சினைகள்

கடந்த 12 மாதங்களில் பிள்ளைகளிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக ஆலோசகர் மற்றும் மருத்துவர் சிராந்திகா விதானகே எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக தற்கொலை எண்ணங்கள், திட்டமிடல் மற்றும் முயற்சிகள் சமூகத்தில் முக்கிய பிரச்சினைகளாக உருவெடுத்து வருகின்றன.

நாட்டில் 16-17 வயதுக்குட்பட்டவர்களில் 18% பேர் மனச்சோர்வை அனுபவிக்கின்றனர். அதேவேளை 22.4% பேர் தனிமையை உணர்கிறார்கள், 11.9% பிள்ளைகள் கவலையால் உறங்க முடியவில்லை, மேலும் 7.5% பேருக்கு 2016 முதல் நெருக்கமான நண்பர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

பெண்கள் இடையே 15.4% பிள்ளைகள் தற்கொலை எண்ணங்களைக் கொண்டுள்ளதுடன், 9.6% பேர் தற்கொலைத் திட்டங்களை தீட்டுகின்றனர், மேலும் 9.1% பேர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். புகையிலை பயன்பாடு கடந்த 30 நாட்களில் 5.7% அதிகரித்துள்ளதோடு, புகையற்ற புகையிலைப் பயன்பாடு 7.3% அதிகரித்துள்ளது.

இ-சிகரெட் பயன்பாடும் அதிகரித்து வருவதால் இது ஒரு கவலைக்குறியாகியுள்ளது. 5% பேர் இதைப் பயன்படுத்துவதாக புகாரளித்துள்ளனர். 2016 முதல் பிள்ளைகள் அதிக அளவில் டிஜிட்டல் சூழல்களில் மூழ்கி இருப்பதாலும் இப்பிரச்சினைகள் தொடர்ந்து நிலைகொண்டுள்ளன.

21.9% ஆண்கள் இன்னும் கொடுமைப்படுத்தப்படுவதாகக் கூறினாலும் ஒட்டுமொத்தமாக கொடுமைப்படுத்தல் குறைந்துள்ளது. ஆனால் கடந்த 12 மாதங்களில பாலின அடிப்படையில் பெண்களை விட 5.4% அதிகமான ஆண்கள் சைபர் புல்லிங்கை அனுபவித்துள்ளனர்.

Related posts

அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அடுத்த மாதத்திலிருந்து நடைமுறையில்

admin

அர்ச்சுனாவின்உரைகளை நேரடியாக ஒலி, ஒளிபரப்பு செய்வதற்கு தடை

admin

பாடசாலை விடுமுறை தொடர்பிலான அறிவிப்பு

admin

Leave a Comment