10.2 C
Cañada
April 2, 2025
சினிமா

நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மனோஜ், 1999 ஆம் ஆண்டு தனது தந்தை பாரதிராஜா இயக்கிய தாஜ்மகால் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தவர், ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து விலகி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு வாய்மை, ஈஸ்வரன், மாநாடு போன்ற திரைப்படங்களில் நடித்தார். இவர் இயக்கிய கடைசி படம் மார்கழி திங்கள் ஆகும்.

மனோஜின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் கார்த்தி, சூர்யா, சீமான், பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

மேலும், தமிழ்த் திரைப்பட நடிகரும் தவெக தலைவருமான தளபதி விஜய் நேரில் சென்று மனோஜின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி, பாரதிராஜாவிற்கு ஆறுதல் கூறியுள்ளார்.

Related posts

“கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானுவால் இணைந்தது இந்தியாவும் இலங்கையும்

admin

பாலிவுட் பிரபல நடிகருடன் காதலில் விழுந்த நடிகை ஸ்ரீலீலா

admin

21 ஆண்டுகளுக்க பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் ஆட்டோகிராப்

admin

Leave a Comment