அமெரிக்க ராணுவ ரகசியம் ஒன்று சமீபத்தில் தவறுதலாக ஊடகவியலாளர் ஒருவருக்கு அனுப்பிவைக்கப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து ட்ரம்ப் பல்வேறு சர்ச்சைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது இந்த ரகசியங்கள் கசிய்ந்திருப்பதால் அவர் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். குறிப்பாக கனடாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கு பிறகு இந்த விஷயம் நடந்திருப்பதால் அது மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த சூழ்நிலையில் கனடாவின் பிரதமர் மார்க் கார்னி “நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” எனக் கூறி அமெரிக்காவின் செயல்பாடுகளால் கனடா எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இது மிகவும் முக்கியமான மற்றும் கவலைக்குரிய விஷயம் எனக் கூறிய கார்னி இதுபோன்ற சம்பவங்களிலிருந்து நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். அதே நேரத்தில் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் வலுவான உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு தொடர்பான உறவுகள் உள்ளன என்றாலும் அவை தொடர்ந்து மாறிக்கொண்டே வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.