12.4 C
Cañada
March 30, 2025
இலங்கை

இராணுவத் தளபதிகள் மீது பிரிட்டன் விதித்த தடை குறித்து மஹிந்த அறிக்கை

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கூறப்பட்ட முன்னாள் தலைமைத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கென்னரடா மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்ய ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது.

இந்தத் தீர்மானத்துக்கு எதிராக, இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடமைகளைச் செய்த ஆயுதப்படை அதிகாரிகளை வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகள் குறிவைத்து துன்புறுத்துவதை எதிர்க்க அரசாங்கம் நேரடியாக நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு பதிலளிக்கும் வகையில், முன்னாள் ஆயுதப்படைத் தளபதிகள் மீது விதிக்கப்பட்ட தடைகளுக்கு எதிராக அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

Related posts

இந்தியாவில் இருந்து பஸ்கள் வாங்கப்பட்டமை தொடர்பான வெளிக்கொணர்வு

admin

போதிய முதலுதவி வசதி இல்லாமையால் சிகிரியாவில் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

admin

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பணமோசடி செய்த பெண்

admin

Leave a Comment